அபூர்வ வெள்ளை விஷ்ணு கிரந்தி - Vellai vishnu kiranthi - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, June 4, 2015

அபூர்வ வெள்ளை விஷ்ணு கிரந்தி - Vellai vishnu kiranthi

அபூர்வ வெள்ளை விஷ்ணு கிரந்தை




விஷ்ணு கரந்தை, விஷ்ணுகாந்தி, விஷ்ணுகிரந்தி Evolvulus alsinoides, Convolvulaceae
வெள்ளை விஷ்ணு கிரந்தை (எ) விஷ்ணுகாந்தி



விஷ்ணு கரந்தை, விஷ்ணுகாந்தி, விஷ்ணுகிரந்தி Evolvulus alsinoides, Convolvulaceae
நீல நிற விஷ்ணு கரந்தை (எ) விஷ்ணுகாந்தி
தமிழ் பெயர் : விஷ்ணு கரந்தை, விஷ்ணுகாந்தி, விஷ்ணுகிரந்தி

தாவரவியல் பெயர் : Evolvulus alsinoides 

தாவர குடும்பம் : Convolvulaceae 

                   இத்தாவரம் படர் கொடி வகையை சார்ந்தது, இதன் இலை மற்றும் மலர்கள் மிகச் சிறியவை. இதன் மலர்கள் மூன்று நிறங்களில் காணப்படும் நீலம், வெள்ளை, மற்றும் செந்நிறம். பெரும் பாலும் நீல நிற மலர்களை கொண்ட செடியை அனைத்து பகுதிகளிலும் மிக எளிதாக காண முடிகிறது. 

                  வெள்ளை நிற மலர்களையுடைய  விஷ்ணு கரந்தையை காண்பது மிக மிக அபூர்வமாகவே உள்ளது. காண்பதற்க்கு அரிதான இச் செடியை பல மாத தேடலுக்கு பிறகு எங்களது தம்பி சம்பத் அவர்களின் தோட்டத்தில் வளர்ந்து பூத்திருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தோம். இதை கடவுளின் அருளாகவே கருதுகிறோம். அச்செடியின் புகைபடத்தையே இங்கு வெளியிட்டுள்ளோம்.செந்நிற மலர்களையுடைய செடியை தேடிவருகிறோம். கடவுளின் அருளலால் காண கிடைத்தால் நிச்சயம் அனைவரும் காண வெளியிடுகிறோம்.

விஷ்ணு கிரந்தையின் மருத்துவ பயன்கள்

                  விஷ்ணு கிரந்தை, ஓரிதல்தாமரை, கீழா நெல்லி மூன்றையும் சரி அளவு எடுத்து பத்து கிராம் எடை அளவு காலை, மதியம், இரவு உணவு உண்பதற்கு முன் பாலுடன் அருந்தி வர நரம்பு தளர்ச்சி, தூக்கத்தில் விந்து வெளியாதல், ஞாபக மறதி, உடல் சூட்டை குறைத்து உடல் பலம் பெற உதவுகிறது.

                விஷ்ணு கிரந்தை செடியின் முலு தாவரத்தையும் எடுத்து மைபோல அரைத்து  பத்து கிராம் எடையளவு தயிருடன் கலந்து சாப்பிட கொடுத்தாள் இரத்த பேதி, சீத பேதி நிற்க்கும். புளி, காரம் இரண்டையும் தவிற்க்கவும்.

               முலு செடியையும் நன்கு அரைத்து பத்து கிரம் அளவு ஒரு மண்டலம் சாப்பிட்டு வர கண்ட மாலை நோய் நீங்கும்.

               செடியின் அனைத்து பகுதியையும், கண்டங்கத்திரி வேர், ஆடாதொடை , தூது வேளை வகைக்கு மூப்பது கிராம் சிதைத்து ஒருலிட்டர் நீரில் கொத்திக்க வைத்து மூன்று வேளையும் 50 மில்லி வீதம் கொடுத்து வர எலும்புருக்கி நோய் தீரும்.
               முலு தாவரத்தையும் ஜந்து கிராம் அளவு மைபோல் அரைத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை, மதியம் மூன்று வேளையும் சாப்பிட்டு வர சீத பேதி,  இரைப்பை, இருமல், ஈளை, காய்ச்சல், மேகம், எலும்புருக்கி, வாத பித்தம் நோய்கள் தீரும்.

             விஷ்ணு கிரந்தை செடியின் அனைத்து பகுதியையும், கண்டங்கத்திரி வேர், பற்படம், தூது வேளை வகைக்கு மூப்பது கிராம் சிதைத்து ஒருலிட்டர் நீரில் கொத்திக்க வைத்து மூன்று வேளையும் 50 மில்லி வீதம் கொடுத்து வர விடாத காய்ச்சல் தீரும்.

சித்தர் வரிகள்


" போமென்ற வெள்ளை விஷ்ணுகரந்தை தன்னை
பிடுங்கிவந்து நிழலிலுலர்தா யுணர்த்தி கொண்டு
ஏமென்று இடித்து சூரணமே செய்து
எழிலான மண்டலம் தான் தேனில் உண்ணு
சாலமென்ற சாவுபொய்யாம் சதுர்முகவன் படைப்பு
தப்பியே சதாகோடி தரிந்திருக்கும் 
காமென்ற கருவூரார் கொண்ட கற்பம்
காரணமாம் அடியாருக்கு கருதினாரே "

               வெள்ளை விஷ்ணுகரந்தை சமூலமாக எடுத்து சூரிய நிழலில் உலர்த்தி சூரணம் செய்து ஒரு மண்டலம் அதாவது 48 நாள் காலை மற்றும் மாலை தேனில் மூன்று விரல் அளவு சேர்த்து உண்ண வேண்டும். அவ்வாறு  உண்டால் சாவு பொய்யாகும் என்றும் பிரமன் படைத்த விதியை மீறி சதாகோடி ஆண்டுகள் இருக்கலாம் என்றும் இது கருவூரர் உண்டு வந்த கற்பம் என்றும் போகர் கூறியுள்ளார்.

செல்வம் தரும் மூலிகை

                இந்த வெள்ளை விஷ்ணு கிரந்தை மூலிகை தன ஆகர்ஷணத்தை உண்டாக்கும்.  இந்த மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை என்னும்  வெள்ளை விஷ்ணு கரந்தை. அஷ்ட லக்ஷ்மிகளை நம் இல்லத்தில் நிலைப்பெற வைக்கும் ஆற்றல் கொண்டது. எங்கேனும் காண கிடைத்தால் தவராது எடுத்து வந்து வீட்டில் வளர்க்கவும்.

keywords : vellai vishnu kiranthai , vishnu kiranthai, sennira vishnu kiranthai, vishnukiranthai, vishnu kiranthai mooligai, vishnu kiranthai herbal, Evolvulus alsinoides in tamil, Convolvulaceae in tamil english, apoorva mooligai, selvam tharum mooligai, panam tharum moolaigai,
veetil valarkka vendaiya mooligai, blue vishnu kiranthai, aakarshan mooligai, ashta laxmi mooligai, vishnu kanthi 
vishnu kiranthi, vishnukaanthi  vishnukiranthi, vishnukranthi mooligai
அபூர்வ மூலிகைகள், செல்வம் தரும் மூலிகை, பணம் தரும் மூலிகை, 
மரணம் தவிர்க்கும் மூலிகை