கீழ்நோக்கு நாள் - keel nokku naal - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, May 7, 2015

கீழ்நோக்கு நாள் - keel nokku naal

கீழ்நோக்கு நாள் - keel nokku naal


பொது பணிகள்


                    குளம் வெட்டுதல், வேலி அமைத்தல், கிணறு தோண்டுதல், களஞ்சியம் அமைத்தல், கிரகப்பிரவேசம் செய்தல், கணிதம் கற்றுக்கொள்ள தொடங்குதல் ஆகியவற்றையும், பூமியை நோக்கி செய்யும் எந்த பணியையும் கீழ்நோக்கு நாட்களில் ஆரம்பிப்பது உத்தமம்.

விவசாய பணிகள்


                    வயல்களில் முதன் முதலாக பயிர் செய்யும் போது, வெற்றிலை, வள்ளி, சிறு வள்ளி, ஆள்வள்ளி, கருணை, உருளை, சோம்பு மற்றும் கிழங்கு வகைகளை பயிடும் போது கீழ்நோக்கு நாட்களில் செய்ய நல்ல விளைச்சலை கொடுக்கும்.

கீழ்நோக்கு நாட்களை எப்படி தெரிந்து கொள்வது?


கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஒன்பது நட்சத்திரங்களும் வரும் நாட்கள் கீழ்நோக்கு நாட்கள் என்று மனையடி சாஸ்திரம் கூறுகிறது.

நட்சத்திரங்கள்


1. பரணி
2. விசாகம்
3. பூரட்டாதி
4. கிருத்திகை
5. பூரம்
6. மகம்
7. ஆயில்யம்
8. பூராடம்
9. மூலம்

           இந்த ஒன்பது நட்சத்திரங்கள் வரும் நாட்கள் கீழ்நோக்கு நாட்கள் ஆகும். ஒரு கீழ்நோக்கு நாளை நான்கு பகுதியாக பிரித்து பலன் கூறப்பட்டுள்ளது.
            கீழ்நோக்கு நாட்களில் முதல் பகுதியில் செய்வதே மிகச் சிறப்பு, சிறப்பான பல நல்ல பலன்கள் கிடைக்கும். இரண்டாம் பகுதியில் செய்தால் மனதில் மகிழ்ச்சி கிடைக்கும், மூன்றாம் பகுதியில் நடுத்தரமான பலன்கள் மட்டுமே கிடைக்கும். நான்காம் பகுதி அல்லது இரவு நேரத்தில் எந்த விதமான நல்ல காரியங்களையும் செய்ய கூடாது.