பிண்ணாக்கு கீரை மருத்துவ பயன் - pinnaku keerai maruthuva payan - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, April 29, 2015

பிண்ணாக்கு கீரை மருத்துவ பயன் - pinnaku keerai maruthuva payan

பிண்ணாக்கு கீரை மருத்துவ பயன் - pinnaku keerai maruthuva payan


பிண்ணாக்கு கீரை

          முட்டை வடிவத் தனியிலைகளையும் செந்நிறத் தண்டினையும் பட்டையான காய்களையும் உடைய சிறுஞ்செடிபயிர்களுக்குக்கிடையே களையாக வளரும். புண்ணாக்கி என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் காணப்படுகிறது. இலைகள் மருத்துவப் பயனுடையவை.

மருத்துவ பயன்கள்



          சிறுநீர் பெருக்குதல், மலமிளக்குதல் ஆகிய குணங்களையுடையது. இக்கிரையைப் பருப்பிட்டுச் சமைத்து நெய்யுடன் சோற்றில் கலந்து சாப்பிட்டு வர உட்சூடு, வெள்ளை, சீதப்பேதி, இரத்தப்பேதி ஆகியவை தீரும்.

         பிண்ணாக்குகீரை 50 கிராம், சுக்கு, மிளகு, கடுக்காய்த்தோல் வகைக்கு 10 கிராம் அரை லிட்டர் நீரில் சேர்த்து 200 மி.லி.யாகக் காய்ச்சி 10 மி.லி.ஆகக் காலை மாலை 5 நாள் சாப்பிட்டு வர வாதக் குடைச்சல் தீரும்.