இலுப்பை மருத்துவ பயன் - iluppai Maruthuva payan - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, April 26, 2015

இலுப்பை மருத்துவ பயன் - iluppai Maruthuva payan

இலுப்பை மருத்துவ பயன் - Iluppai Maruthuva payan


       கிளைநுனியில் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்துக் கொத்தான வெள்ளை நிற மலர்களையும், முட்டை வடிவ சதைக் கனியையும் நொறுங்கக்கூடிய உறையினால் மூடப் பெற்ற விதையினையும் உடைய  பால் போன்ற சாறுள்ள மரம், தமிழகமெங்கும் தோப்பு தோப்பாக வளர்க்கப்படுகிறது. 


மருத்துவ பயன் உடைய பகுதிகள்

       இலுப்பை, இருப்பை, ஒமை என்றும் குறிப்பிடுவதுண்டு. இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.  

 

பெண்களுக்கான மருத்துவ பயன்

      இலுப்பபை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வரத் தாய்பால் சுரப்பு மிகும். இலுப்பபைப் பூ 50 கிராம் அரை லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி வடிகட்டிக் காலை மட்டும் ஒரிரு மாதங்கள் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.

 

ஆண்களுக்கான மருத்துவ பயன்

     10 கிராம் பூவை 200 மி.லி.பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வர தாது பெருகும். காய்ச்சல் தாகம் குறையும்.

ilupai maruthuva payankal. ilubai maruhuva payankal, ilupai moolikai, siddha maruthuvam in tamil, tamil mooligaikal, owshadham ilupai in tamil botanical name, ilupai in English. pengal thaipaal surakka, taipal surakka, thaaipaal surakka. vinthu peruka.