சோளம் மருத்துவ பலன்கள் - ஔசதம்


 
சோளம் மருத்துவ பலன்கள் - ஔசதம் - owshadham
சோளத்தின் மருத்துவ பலன்கள்

 
சோளத்தில் இரு வகைகள் உள்ளன வெள்ளை சோளம், சிகப்பு சோளம். மக்கா சோளத்தை இதனுடன் ஒப்பிட வேண்டாம்.

நாம் படத்தில் காட்டி இருப்பது வெள்ளை சோளம்.(சோள கறுது) வெள்ளை சோளம் மற்றும் சிகப்பு சோளம் இரண்டுமே உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தரக்கூடியவை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சோளத்தை உணவா சாப்பிடும் பொழுது சக்கரையின் அளவு கட்டுப்பாட்டில் உள்ளதை நன்கு உணர முடியும். நீரிழிவு தாக்கம் உள்ளவர்கலுக்கு மிக மிகச் சிறந்த உணவாக கருதப்படுகிறது.
சோளத்தை உணவாக சமைத்து மோரில் கரைத்து குடித்தால் மிகவும் சுவையனதாக இருக்கும், உடல் சுறு சுறுப்புடன் இருக்கும், மந்த தன்மை இருக்காது, தண்ணீர் தாகம் ஏற்ப்படாது, உடலுக்கு முலு வழிமையையும் கொடுக்க கூடியது. மூல நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. 
விவசாயத்தில் சோளப்பயிர் செய்வது எழுமையனது, சோளப்பயிர்கலுக்கு இரசாயன பூச்சி கொல்லி மருந்துக்கள் பயன்படுத்துவது கிடையாது ஏன்னெனில் இப்பயிரில் நோய்த்தாக்கம் ஏற்ப்படுவதில்லை. குறுகிய கால பயிர் என்பதால் இரசாயன உரங்கள் கூட அதிக அளவு யாரும் பயன் படுத்துவதில்லை. காய்ந்த தண்டு மற்றும் சோவையை பசுவிற்க்கு உணவாக கொடுக்கும் போது பசுவின் பால் மிகவும் கெட்டித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். நகர்புற வாசிகலுக்கு கெட்டியான பாலை பர்த்திருக்க வாய்ப்பு கிடையாது அகவே கிரமப்புற மக்களிடம் கேட்டு பாருங்கள்.
நம் முன்னோர்கள் தினமும் காலையில் சோள உணவையே அதிக அளவு உண்டு நீண்ட ஆயிலுடன் வாழ்ந்துள்ளனர். உங்கள் பெரியோர்களிடம் கேட்டு இதன் பெருமையை உணரலாம்.

சோளம் மருத்துவ பலன்கள் - ஔசதம் சோளம் மருத்துவ பலன்கள் - ஔசதம் Reviewed by Magarajothi P on 10:36:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.